புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்கட்சித்தலைவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக, வலுவான எதிர்க்கட்சிகள் அணி திரண்டால் தவிர வெல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் இருதினங்களுக்கு முன்டெல்லி வந்திருந்தார். அவருடன், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவும் உடன் இருந்தார். இருவரும் காங்கிரஸின் தலைவர்களான மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்கட்சித்தலைவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
Author: செய்திப்பிரிவு