Advertisement
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2022-23-ல் ரயில்களில் டிக்கெட் எடுக்காமலும், பதிவு செய்யாத சரக்குகளை எடுத்துச் சென்றவர்களிடம் ரூ.1.55 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்ட ரயில் டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்தகுமார் 27,787 வழக்குகளை பதிந்து ரூ.1.55 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளார். டிக்கெட் ஆய்வாளர் ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1.03 கோடி, சக்திவேல் டிக்கெட் பரிசோதகர் ரூ1.10 கோடி அபராதம் வசூல் செய்துள்ளார்.
Advertisement