Advertisement
சிவகங்கை: சிவகங்கையில் ரமலான் நோன்பு மேற்கொள்ளும் ஆயிரம் ஏழை முஸ்லிம்களுக்கு, ஒரு குடும்பம் தினமும் இலவசமாக பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகிறது.
மார்ச் 24-ம் தேதி முதல் ரமலான் நோன்பை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள், நோன்பை தொடங்கு வதற்கு முன்பாக ஸஹர் என்ற உணவை அதிகாலையில் உண்பது வழக்கம். இந்நிலையில், நோன்பு மேற்கொள்ளும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவும் வகையில், சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்த அன்வாரிய்யா என்ற குடும்பத்தினர் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.
சிவகங்கையில் ரமலான் நோன்பு மேற்கொள்ளும் ஆயிரம் ஏழை முஸ்லிம்களுக்கு, ஒரு குடும்பம் தினமும் இலவசமாக பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகிறது. மார்ச் 24-ம் தேதி முதல் ரமலான் நோன்பை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர்
Authour: செய்திப்பிரிவு
Advertisement