திருவனந்தபுரம்: கேரளாவில் ரப்பர் உட்பட வேளாண் பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதைக் கண்டித்தும் ரப்பர் கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தியும் கண்ணூர் மாவட்டம் அலகோட் பகுதியில் விவசாயிகள் பேரணி நடத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் பேரணியில் தலச்சேரி மலபார் கத்தோலிக்க சர்ச் ஆர்ச் பிஷப் ஜோசப் பம்ப்லேனி பேசியதாவது: கேரளாவில் ரப்பர் உட்பட வேளாண் பொருட்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? மத்தியில் ஆளும் கட்சி ரப்பர் விவசாயிகள் விஷயத்தில் சாதகமாக கொள்கை முடிவெடுத்தால் விலையை உயர்த்த முடியும். அந்தக் கட்சிக்கு மலபார் கிறிஸ்தவர்கள் வாக்களிப்பார்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ரப்பர் விலையை ரூ.300 ஆக உயர்த்தினால் நாங்கள் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க தயார். ரப்பர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.
கேரளாவில் ரப்பர் உட்பட வேளாண் பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதைக் கண்டித்தும் ரப்பர் கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தியும் கண்ணூர் மாவட்டம் அலகோட் பகுதியில் விவசாயிகள் பேரணி நடத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Author: செய்திப்பிரிவு