புதுடெல்லி: காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், "பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மம்தா பானர்ஜி பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ சோதனைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள மம்தா பானர்ஜி விரும்புகிறார். அதனால், அவர் காங்கிரஸுக்கு எதிராக பேசுகிறார். இதனால் பிரதமர் மகிழ்ச்சியடைவார்" என்று கூறினார்.
காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
Author: செய்திப்பிரிவு