புதுடெல்லி: ரஃபேல் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் ராகுல் காந்தி மாறவில்லை. அதன் காரணமாகவே இப்போது அவர் எம்பி பதவியை இழந்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. அதோடு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் சமூக வலைதள பக்கங்களில் தங்களது பெயர்களுக்கு முன்னால் காவலன் என்ற அடைமொழியை சேர்த்தனர்.
ரஃபேல் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் ராகுல் காந்தி மாறவில்லை. அதன் காரணமாகவே இப்போது அவர் எம்பி பதவியை இழந்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு