2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான (தமிழ்) விருது 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்னும் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் சங்க காலப் பாணர், கூத்தர்களின் ஆற்றுப்படையாக உரைநடையில் இந்நாவல் எழுதப்பட்டது. வெளியான குறுகிய காலத்திலேயே பெருத்த வரவேற்பைப் பெற்ற நாவல், பல பதிப்புகளைக் கண்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
பாரியின் படுகொலையைக் கதைக்களனாகக் கொண்டு உயிரோட்டத்துடன் மொழிபெயர்ப்பு செய்தவர் கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கே.வி.ஜெயஸ்ரீ. அவர் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள், இலக்கியத் தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பழங்காலத்தில் திண்ணையில் உட்கார்ந்து கதை பேசும் வடிவம், இப்போது மீளாக்கம் செய்யப்பட்டு ஃபேஸ்புக் திண்ணையாக மாறியிருக்கிறது.
க.சே.ரமணி பிரபா தேவி