சென்னை: "விதிமீறல்களை சரிசெய்து நீதி வழங்குவதில் நமது நீதித் துறை வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீங்கள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த நேரத்தில் நான் உங்களுடன் துணைநிற்கிறேன். நீங்கள் ஏற்கெனவே இதுபோன்ற நியாயமற்ற தருணங்களையும், சோதனையா நேரங்களையும் கடந்து வந்திருப்பீர்கள். விதிமீறல்களை சரிசெய்து நீதி வழங்குவதில் நமது நீதித் துறை வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீங்கள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சத்யமேவ ஜெயதே" என்று பதிவிட்டுள்ளார்.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நீங்கள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று ராகுல்காந்திக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு