Advertisement
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா, அமெரிக்க விமானப் படைகள் இந்த மாதம் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டா விமானப் படைத் தளத்தில் இந்த கூட்டு போர்ப் பயிற்சி ஏப்ரல் 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டுப் போர்ப் பயிற்சியில் இந்திய, அமெரிக்க விமானப் படைகளைச் சேர்ந்த பல்வேறு ரக விமானங்கள் ஈடுபடவுள்ளன. அதே நேரத்தில் இந்த பயிற்சியில் ஜப்பான் விமானப் படை பார்வையாளராக மட்டும் கலந்துகொள்கிறது. இரு நாட்டு விமானப் படைகளின் சாகசம் மற்றும் போர்த்திறன்களை ஜப்பான் விமானப் படையினர் பார்வையிட்டு பயிற்சி பெறவுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா, அமெரிக்க விமானப் படைகள் இந்த மாதம் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
Author: செய்திப்பிரிவு
Advertisement