சென்னை: உரிய தகுதியின்றி மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி-க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என டிஜிபி-க்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அக்குபஞ்சர், எலெக்ட்ரோபதி, யோகா போன்ற மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடும் தங்களது தொழில் உரிமையில் தலையிடக் கூடாது என போலீஸாருக்கு தடை விதிக்கக் கோரி, மாற்றுமுறை மருத்துவ தொழில் புரிந்துவரும் செல்வகுமார், சண்முகம் உள்ளிட்ட 61 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
உரிய தகுதியின்றி மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி-க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என டிஜிபி-க்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
Author: செய்திப்பிரிவு