Advertisement
கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'அசுரன்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அத்திரைப்படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதில், "அசுரன் படம் மட்டுமல்ல, பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!" என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டை எழுப்பினார்.
முரசொலி பஞ்சமி நிலம் இல்லை என்பதை திமுக நிரூபிக்குமா என்ற கேள்விக்கு ‘கட்டாயமாக நிரூபிக்கும்’ என ஆர்.எஸ்.பாரதி பதிலளித்தார்.
நந்தினி வெள்ளைச்சாமி
Advertisement