முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை பேரணி

12

சென்னை: முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், சென்னையில் கோரிக்கைப் பேரணி நடைபெற்றது.

மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களின் முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுசார்பில், கோட்டை நோக்கி கோரிக்கை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,இப்பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். மின்வாரியத்தில் தற்போது 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பி ஊழியர்களின் பணிச் சுமையைக் குறைக்க வேண்டும்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.