மதுரை: “முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு போராளியாக ஜெயித்திருக்கிறார்” என்று அவரின் 70 ஆண்டு பொதுவாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியை பார்த்த நடிகர் வடிவேலு பிரமிப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை நத்தம் சாலை மேனேந்தல் மைதானத்தில் நடந்த மு.க.ஸ்டாலின் “புகைப்பட கண்காட்சி”யை நடிகர் வடிவேல் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப்படக் கண்காட்சி பிரமிப்பாக இருக்கிறது. கண்காட்சியில் உள்ள அனைத்தும் புகைப்படம் இல்லை நிஜம். படிப்படியாக அவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறினை இங்கு புகைப்படங்களாக வைத்துள்ளனர். இதனை காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. ஒரு மனிதனால் சும்மா ஒரு நபர் திட்டுவதைக் கூட தாங்க இயலாது.
“முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு போராளியாக ஜெயித்திருக்கிறார்” என்று அவரின் 70 ஆண்டு பொதுவாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சியை பார்த்த நடிகர் வடிவேலு பிரமிப்பு தெரிவித்துள்ளார்.
Author: ஒய். ஆண்டனி செல்வராஜ்