கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதியில் பாரபட்சம் இருந்ததை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே சுட்டிக்காட்டின. நோய்த்தொற்று மற்றும் இறப்பில் அப்போது முன்னணியில் இருந்த மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளாவை விட உ.பி., பிஹார் போன்ற இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதை அரசியல் கடந்து அனைத்துத் தரப்பினரும் கண்டித்தார்கள்.
இதற்கிடையே மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனையின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிதி தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு இதுவரையில் ஏற்கவில்லை. இதனால், வெறுங்கையால் முழம்போடுகிறது மத்திய அரசு என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதியில் பாரபட்சம் இருந்ததை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே சுட்டிக்காட்டின.
கே.கே.மகேஷ்