புதுடெல்லி: டெல்லி அரசு கொண்டுவந்த புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. உரிமம் பெற்றவர்கள் ஆம் ஆத்மி கட்சியினருக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், அந்த கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது. எனினும், இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
டெல்லி அரசு கொண்டுவந்த புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
Author: செய்திப்பிரிவு