சென்னை: "சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், தேவையற்ற சலுகைகள், வெளிநாட்டு வழக்குகளில் குற்றச்சாட்டுகள் மற்றும் ஷெல் நிறுவனங்களுடனான தொடர்பு ஆகியவை தவறானவை, எனவே அவை முற்றிலும் மறுக்கப்படுகின்றன" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “2010-ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முதல்கட்ட திட்டத்திற்கான மெட்ரோ ரயில்கள் வாங்கும் போது அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு தேவையற்ற நன்மைகள் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை விளக்குவதற்காகவும், பின்பற்றப்பட்ட நியாயமான செயல்முறையை விளக்குவதற்காகவும் இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது. இதன் விளைவாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொது கருவூலத்திற்கு நூற்றுக்கணக்கான கோடிகளை மிச்சப்படுத்தியுள்ளது.
“சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், தேவையற்ற சலுகைகள், வெளிநாட்டு வழக்குகளில் குற்றச்சாட்டுகள் மற்றும் ஷெல் நிறுவனங்களுடனான தொடர்பு ஆகியவை தவறானவை, எனவே அவை முற்றிலும் மறுக்கப்படுகின்றன” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு