சென்னை: முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அவர் கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உட்பட சுமார் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்களில் சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவடைந்தது.
முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு