புதுடெல்லி: மீனவர்களின் பாதுகாப்புக்காக க்யூஆர் கோடுடன் பிரத்யேக பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது என மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
“தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை விரைந்து பெற வசதியாக மீனவர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்படுமா? அவர்களுக்காக அமல்படுத்தப்படும் நல்வாழ்வுத் திட்டங்கள் என்ன?” என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா அளித்த பதில்: “கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதுடன், க்யூஆர் கோடுடன் கூடிய பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளும் மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில், 19.16 லட்சம் மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகளும், 12.40 லட்சம் மீனவர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மீனவர்களின் பாதுகாப்புக்காக க்யூஆர் கோடுடன் பிரத்யேக பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது என மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு