சென்னை: தமிழகத்தை பசுமைப் பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்தும் `எத்தனால் கொள்கை 2023'-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023’, ‘தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023’, `தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023’ மற்றும் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்’ ஆகியவை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழகத்தை பசுமைப் பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்தும் `எத்தனால் கொள்கை 2023′-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
Author: செய்திப்பிரிவு