மதுரை: காலநிலை மாற்றத்தால் பூச்சி, புழு, நோய்களிலிருந்து பாதுகாக்கும் ‘பழுப்பு நிற காகித போர்த்தி’ தொழில்நுட்பம் மூலம் விளைச்சல் பாதிப்பை ஈடுகட்டுகின்றனர் மா சாகுபடி விவசாயிகள்.
‘பழங்களின் ராஜா’ மாம்பழத்தின் பூர்வீகம் கிழக்காசிய நாடான இந்தோ- பர்மா. உலக அளவில் மாம்பழ சாகுடியில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. உலக மாம்பழத் தேவையில் 52 சதவீதத்தை இந்தியாவே பூர்த்தி செய்கிறது. அடுத்தபடியாக இந்தோனேசியா, சீனா, பாகிஸ்தான், மெக்சிகோ, பிரேசில், நைஜீரியா உள்ளன. இந்தியாவில் 2.4 மில்லியன் ஹெக்டர் சாகுபடி மூலம் 26,359.39 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்து 39.17 மில்லியன் டாலர்கள் ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.
காலநிலை மாற்றத்தால் பூச்சி, புழு, நோய்களிலிருந்து பாதுகாக்கும் ‘பழுப்பு நிற காகித போர்த்தி’ தொழில்நுட்பம் மூலம் விளைச்சல் பாதிப்பை ஈடுகட்டுகின்றனர் மா சாகுபடி விவசாயிகள்.
Authour: சுப. ஜனநாயகசெல்வம்