சென்னை: மாநிலத்தின் மின்உற்பத்தி, தேவையை கருத்தில் கொண்டு என்எல்சி விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி), சுரங்கம் அமைக்க எடுக்கப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு, மாற்றுஇடம், ஒப்பந்தப்படி நிரந்தர வேலைதராதது தொடர்பான சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதன் மீது, அருண்மொழித்தேவன் (அதிமுக) , கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச்செல்வன் (விசிக), நாகை மாலி (சிபிஎம்) ஆகியோர் பேசினர்.
மாநிலத்தின் மின்உற்பத்தி, தேவையை கருத்தில் கொண்டு என்எல்சி விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு