சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.84.84 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள், ரயில் பாலங்களின் கீழ் பூங்கா அழகுபடுத்தும் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலர் வெ.இறையன்பு, பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத் தடுப்பு நிவாரண நிதியின் கீழ், அடையாறு மண்டலம், இந்திரா நகர், முதல் அவென்யூவில் ரூ.29.16 லட்சம், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் கோவளம் வடிநிலப் பகுதியில் பெருங்குடி மண்டலத்தில் ரூ.31.58 கோடியிலும், ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட நங்கநல்லூரில் ரூ.7.87 கோடியிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.84.84 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள், ரயில் பாலங்களின் கீழ் பூங்கா அழகுபடுத்தும் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலர் வெ.இறையன்பு, பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
Author: செய்திப்பிரிவு