சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு இயக்கப்படும் மெட்ரோ ரயில்களைப் பராமரிக்கும் வகையில், மாதவரம், பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவற்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் பரங்கிமலை-சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோ நகர் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை கோயம்பேட்டில் உள்ள பணிமனையில் பராமரிக்கப்படுகின்றன. விம்கோ நகரில் 20 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு இயக்கப்படும் மெட்ரோ ரயில்களைப் பராமரிக்கும் வகையில், மாதவரம், பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Author: மு.வேல்சங்கர்