மதுரை: மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் சாக்கடை கால்வாய் உடைந்து கழிவுநீர் வளாகம் முழுவதும் தேங்கி தூர்நாற்றம் வீசுவதால் பயணிகள், பஸ்ஸுக்காக காத்திருக்க முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
மதுரை மாட்டுத் தாவணியில் தென் தமிழகத்திலேயே பெரிய ஒருங்கிணைந்த எம்ஜிஆர் பேருந்து நிலையம் செயல்படுகிறது. இந்தப் பேருந்து நிலையத்தை கடந்த 1999-ம் ஆண்டு மே 25-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். தமிழகத்திலேயே ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற ஒரே பேருந்து நிலையமாக இந்தப் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்தப் பேருந்து நிலையத்தை பராமரிக்காமல் கைவிட்டனர். ஆனால், பேருந்து நிலையத்தின் பெயரை மட்டும் எம்ஜிஆர் பேருந்து நிலையமாக மாற்றினர். பேருந்து நிலையத்தில் இருந்த இலவச கழிப்பிட அறைகளை கட்டண கழிப்பறையாக மாற்றினர். அந்தக் கழிப்பிட அறைகளும் சரியாக பராமரிக்கப்படுதில்லை. அதுபோல், மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. மேற்கூரை அவ்வப்போது உடைந்து கீழே விழுந்து வருகின்றன.
மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் சாக்கடை கால்வாய் உடைந்து கழிவுநீர் வளாகம் முழுவதும் தேங்கி தூர்நாற்றம் வீசுவதால் பயணிகள், பஸ்சுக்காக காத்திருக்க முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்
Author: ஒய். ஆண்டனி செல்வராஜ்