கிருஷ்ணகிரி: மல்லச்சந்திரம் மலையில் 2,500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே மல்லச்சந்திரத்தில் உள்ள மோரல் பாறை கல் திட்டைகள் புகழ் பெற்றவையாகும். இங்கு ஏற்கெனவே 11 கல் திட்டைகளில் 2,500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது, இப்பாறைக்கு எதிரே உள்ள மலையில் பாறை ஓவியம் இருப்பதைப் பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், பிரகாஷ் ஆகியோர் கண்டறிந்தனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் இம்மலைக்கு மத்திய பல்கலைக் கழக கல்லூரி மாணவர்கள் தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் களப்பயணம் சென்றனர்.
கிருஷ்ணகிரி அருகே மல்லச்சந்திரத்தில் உள்ள மோரல் பாறை கல் திட்டைகள் புகழ் பெற்றவையாகும். இங்கு ஏற்கெனவே 11 கல் திட்டைகளில் 2,500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
Authour: செய்திப்பிரிவு