புதுடெல்லி: பாஜக ஆட்சியில் கலவரம் நடக்காது என்ற அமித் ஷாவின் பேச்சு மற்றொரு பொய்யான வாக்குறுதி என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும், மத்தியிலும் சில மாநிலங்களிலும் நடந்த கலவரங்களையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னதாக, பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தின் ஹிசுவா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர், "வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறட்டும். பிஹாரில் 40-க்கு 40 நாடளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறவும், 2025-ம் ஆண்டு மாநிலத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கவும் உதவி செய்யுங்கள். அதன் பின்னர், இங்கு கலவரக்காரர்களை ஒடுக்கி மாநிலத்தின் நிலைமை தலைகீழாக மாற்றப்படும். பாஜக ஆட்சியில் கலவரங்கள் நடைபெறாது" என்று பேசினார்.
பாஜக ஆட்சியில் கலவரம் நடக்காது என்ற அமித் ஷாவின் பேச்சு மற்றொரு பொய்யான வாக்குறுதி என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும், மத்தியிலும் சில மாநிலங்களிலும் நடந்த கலவரங்களையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு