Advertisement
சேலம்/கிருஷ்ணகிரி: மருத்துவக் கல்லூரி கட்டிட முறைகேடு தொடர்பான விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை முதல்வர் ஸ்டாலினிடம்தான் முதலில் விசாரிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து, செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
மருத்துவக் கல்லூரி கட்டிட முறைகேடு தொடர்பான விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை முதல்வர் ஸ்டாலினிடம்தான் முதலில் விசாரிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement