சென்னை: விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியது மனிதத் தன்மையற்ற செயல் என்றும் இதில் ஈடுபட்ட நெல்லை காவல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவர் ஜல்லிக்கற்களைக் கொண்டு விசாரணைக் கைதிகளைக் குரூரமாகத் தாக்கி, அவர்கள் பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பற்களை உடைத்து, வாயில் ஜல்லிக் கல்லைத் திணித்து முகத்தில் கடுமையாகத் தாக்கியதாகவும் 8 இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியது மனிதத் தன்மையற்ற செயல் என்றும் இதில் ஈடுபட்ட நெல்லை காவல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
Author: செய்திப்பிரிவு