Advertisement
புதுடெல்லி: மத்திய பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.12,815 கோடி கூடுதல் செலவாகும்.
மத்திய பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
Author: செய்திப்பிரிவு
Advertisement