கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு எதிரான மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து தலைநகர் கொல்கத்தாவில் வரும் 29-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை போராட்டம் நடத்த இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ''மேற்கு வங்கத்திற்கு எதிராக மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. இதேபோல், வீடு கட்டும் திட்டம், சாலைத் திட்டம் போன்ற திட்டங்களுக்கும் மேற்கு வங்கத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை.
மேற்கு வங்கத்திற்கு எதிரான மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து தலைநகர் கொல்கத்தாவில் வரும் 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை போராட்டம் நடத்த இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு