ஶ்ரீவில்லிபுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து காவல் துறை, சுகாதாரத் துறை, வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த அலுவலகம் அமைக்க வேண்டும் என இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5500 அடி உயரத்தில் சதுரகிரி கோயிலை சுற்றியுள்ள 75.76 ஏக்கர் நிலப்பகுதி கோயிலுக்கு சொந்தமானது ஆகும். கோயில் அமைந்துள்ள வனப்பகுதி மதுரை மாவட்டம் சாப்டூர் பீட் பகுதியில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்லும் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இதனால் தாணிப்பாறை நுழைவு வாயில் வரை விருதுநகர் மாவட்ட அதிகாரிகளும், வனப்பகுதியில் மதுரை மாவட்ட வனத்துறை, போலீஸ், சுகாதாரத்துறை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து காவல்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த அலுவலகம் அமைக்க வேண்டும் என இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Author: அ.கோபால கிருஷ்ணன்