மதுரை: சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அலுவலக கூட்டங்களில் டீ, காபிக்கு பதிலாக இனி ‘சிறுதானிய பால் கஞ்சி’ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறும். அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள், அதிகாரிகளுக்கு வழக்கமாக டீ மற்றும் காபி வழங்கப்படும். ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதன்முறையாக டீ, காபிக்கு பதிலாக சிறுதானிய பால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அலுவலக கூட்டங்களில் டீ, காபிக்கு பதிலாக இனி ‘சிறுதானிய பால் கஞ்சி’ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
Authour: ஒய். ஆண்டனி செல்வராஜ்