மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப்பகுதியில் சுமார் 8000 ஆண்டுகள் பழமையான, புதிய கற்காலத்தின் அரவைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் பாறையில் உருவாக்கப்பட்ட அரவை பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பதாக நூர்சாகிபுரம் சு.சிவகுமார் தகவல் தெரிவித்தார். அதன்படி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் து.மனோஜ், மு.பிரவீனா ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இதில் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரவை அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப்பகுதியில் சுமார் 8000 ஆண்டுகள் பழமையான, புதிய கற்காலத்தின் அரவைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் பாறையில் உருவாக்கப்பட்ட அரவை பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளது
Authour: சுப. ஜனநாயகசெல்வம்