புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அவர் அமலாக்கத் துறையின் பாதுகாப்பில் விசாரணையை சந்தித்து வருகிறார். இந்நிலையில் மணிஷ் சிசோடியா மற்றும் 5 அதிகாரிகள் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் டெல்லி அரசு புதிதாக ஏற்படுத்திய ரகசிய தகவல் பிரிவை (ஃபீட்பேக் யூனிட்), ஆம் ஆத்மியின் அரசியல் உளவு வேலைகளுக்கு பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு