சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு, திமுக வட்ட செயலாளர்கள் சிலர் இடையூறாக அளிப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக முதல்வரை சந்தித்து புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில், தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேசினர்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
Author: செய்திப்பிரிவு