Advertisement
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் (மார்ச் 29) அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதல் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் மூன்று மசோதாக்களையும், மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்களையும் அறிமுகப்படுத்தி அதன் மீது விவாதம் நடத்த அரசு தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
Author: செய்திப்பிரிவு
Advertisement