சென்னை: மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு, மகாவீரர் ஜெயந்தி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய துணைக்கண்டத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்றான சமணத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நாளில் தமிழகத்தில் தொன்றுதொட்டு சமணத்தை பின்பற்றி வாழ்ந்து வரும் மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரச குடும்பத்தில் பிறந்தும் செல்வச்செழிப்பை புறந்தள்ளி, உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம் என்ற உயர்ந்த நல்லறங்களை உலகுக்கு போதித்தவர் மகாவீரர். இல்லாதோர்க்கு ஈந்து, மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளான மகாவீரர் ஜெயந்தியைப் போற்றுவோம்.
மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு, மகாவீரர் ஜெயந்தி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு