சென்னை: காவல் துறையினரால் சுடப்பட்டவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தெளிவற்ற ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மதுரையை சேர்ந்த சத்திபாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தினர் அழைத்து சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் சஞ்சய்ராஜாவின் காலில் குண்டடிப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காவல் துறையினரால் சுடப்பட்டவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தெளிவற்ற ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Author: ஆர்.பாலசரவணக்குமார்