புதுடெல்லி: போலி மருந்துகளை தயாரித்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் உயிரிழந்தனர். இதேபோல், இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மருந்தை சாப்பிட்ட அமெரிக்க குழந்தையின் கண்பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், தரமற்ற, போலியான, கலப்பட மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதன்படி கடந்த 15 நாட்களில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 203 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தரமற்ற, போலியான, கலப்பட மருந்துகளை உற்பத்தி செய்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் இமாச்சலபிரதேசத்தில் 70, உத்தரகாண்ட்டில் 45 மற்றும் மத்தியபிரதேசத்தில் 23 நிறுவனங்கள் செயல்படுவது தெரிய வந்துள்ளது. முதற்கட்டமாக 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
போலி மருந்துகளை தயாரித்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது: 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
Advertisement
Advertisement