புதுடெல்லி: போட்டித் தேர்வுகளை எழுத SC மற்றம் OBC மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில், இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மக்களவைக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில், ''நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் இலவசப் பயிற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளை எழுத SC மற்றம் OBC மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில், இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு