போக்குவரத்து துறையை கண்டித்து மார்ச் 29-ல் வாகன பேரணி: வாடகை வாகன ஓட்டுநர்கள் அறிவிப்பு

15

சென்னை: போக்குவரத்துத் துறையை கண்டித்து தலைமைச் செயலகத்தை நோக்கி வரும் 29-ம் தேதி வாகனப் பேரணி நடத்தப்படும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம்தலைவிரித்தாடுகிறது. போக்குவரத்து உரிமம் புதுப்பிக்க அரசுக் கட்டணத்தை மட்டும் செலுத்தி,வட்டாரப் போக்குவரத்து அலுவலரை அணுகினால், ஓட்டுநர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அதுவே இடைத்தரகர்கள் மூலம் அணுகினால், 2 நாட்களில் பணி முடித்துக் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.

போக்குவரத்துத் துறையை கண்டித்து தலைமைச் செயலகத்தை நோக்கி வரும் 29-ம் தேதி வாகனப் பேரணி நடத்தப்படும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.