புதுடெல்லி: பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவித்து, தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. எனினும், இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவித்து, தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு