சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக அமைச்சர் தலைமையில் இன்று (மார்ச்.16) ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் எழுதவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று (மார்ச். 16) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான காரணம் தொடர்பாகவும், இதை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக அமைச்சர் தலைமையில் இன்று (மார்ச்.16) ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
Author: செய்திப்பிரிவு