சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, சென்னையில் நேற்று நடைபெற்ற கட்சி செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், மதுரையில் வரும் ஆக. 20-ம் தேதி மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுநடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் 250-க்கும்மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, சென்னையில் நேற்று நடைபெற்ற கட்சி செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், மதுரையில் வரும் ஆக. 20-ம் தேதி மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
Author: செய்திப்பிரிவு