பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு குறித்து கலங்க வேண்டாம் – தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

14

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு குறித்து தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை பழனிசாமி தரப்பு அறிவித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி அமைப்பு ரீதியான தேர்தல் நடைபெறுவதுதான் சட்ட விதி. கட்சியின் உச்சபட்ச பதவி, அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அமைப்பு ரீதியான மற்ற தேர்தல்களை நடத்த வேண்டும். தேர்தல் நடத்துவதாக இருந்தால், புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இவை எதுவும் முறைப்படி செய்யாமல், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துகிறார்கள்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு குறித்து தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.