மதுரை: எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கட்சியின் முதல் நாடு மதுரையில் நடத்தப்படுவதாக அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மாநாடு பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், பொறுப்பேற்றபிறகு அதிமுகவின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கிளை செயலாளராக பணியை தொடங்கி தற்போது பொதுச்செயலாளராக உயர் பொறுப்பை ஏற்றுள்ள கே.பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பல்வறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதில் மதுரையில் கட்சி மாநாட்டை வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடத்த நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கட்சியின் முதல் நாடு மதுரையில் நடத்தப்படுவதாக அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மாநாடு பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Author: ஒய். ஆண்டனி செல்வராஜ்