சென்னை: விரைவுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளின் விவரத்தைப் பதிவு செய்யுமாறு பேருந்து நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த ஆண்டு மே 5-ம் தேதி, 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பேரவையில் தெரிவித்தார். இதையடுத்து, அன்று முதல் விரைவுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மே 5-ம் தேதி, 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பேரவையில் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு