மாஸ்கோ: பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளது உலக நாடுகளிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த நடவடிக்கை அணு ஆயுதப் பரவல் தடைக்கான வாக்குறுதிகளை மீறும் வகையில் இருக்காது என்று புதின் கூறியிருக்கிறார்.
இந்த முடிவின் மூலம் உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவரும் நேட்டோ படைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கையையும் புதின் வழங்கி இருக்கிறார். இது குறித்து அதிபர் புதின் கூறும்போது, “உக்ரைன் மீதான தாக்குதலுக்காக எங்களது அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்தப் போகிறோம். இது புதிது அல்ல. கடந்த பத்து வருடங்களாக இதனை அமெரிக்கா செய்து வருகிறது. அமெரிக்கா தங்களுடைய அணு ஆயுதங்களை தங்கது நட்பு நாடுகளில் நிலை நிறுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளது உலக நாடுகளிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Author: செய்திப்பிரிவு