மேலக்கோட்டையூர்: மாணவர்கள் தங்கள் எதிர்கால நலன் கருதி, பெற்றோர் கூறும் அறிவுரைகளை கேட்டு செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜே. சத்தியநாராயண பிரசாத் கூறியுள்ளார்.
சென்னை விஐடியில் நேற்று பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஜி.விசுவநாதன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜே. சத்தியநாராயண பிரசாத் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். மொபிலிட்டி மற்றும் பிளாட்ஃபார்ம்ஸ், உபெர், பெங்களூரு நிறுவனத்தின் மூத்த இயக்குநர் டி.மணிகண்டன், ஸ்குவாட் குரூப் லீடர் நிறுவனத்தின் நிர்வாகி மீனாட்சி ஷான் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாணவர்கள் தங்கள் எதிர்கால நலன் கருதி, பெற்றோர் கூறும் அறிவுரைகளை கேட்டு செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜே. சத்தியநாராயண பிரசாத் கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு