பெய்ஜிங்: கடந்த 1970-ம் ஆண்டுக்குப் பின் 2022-ம் ஆண்டு சீன பொருளாதாரத்திற்கு இரண்டாவது மோசமான ஆண்டாக இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிசிபி) உயர்மட்ட அரசியல் தலைவர்களின் கூட்டம் மார்ச் 4ம் தேதி தொடங்கியது. இரண்டு அமர்வுகளாக நடக்கும் இந்த கூட்டம் இரண்டு வாரங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், சீன அரசு 2023ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி இலக்கை கடந்த ஆண்டுகளை விட குறைவாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ராணுவ செலவீனங்களை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா இரண்டாவது முறையாக ராணுவச் செலவீனங்களை அதிகரித்துள்ளது என்று நியூயார்க்கில் இருந்து சீன – அமெரிக்கர்களால் செயல்படும் சர்வதேச ஊடகமான என்டிடி தெரிவித்துள்ளது.
கடந்த 1970-ம் ஆண்டுக்குப் பின் 2022-ம் ஆண்டு சீன பொருளாதாரத்திற்கு இரண்டாவது மோசமான ஆண்டாக இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
Author: செய்திப்பிரிவு